பேலியோ காளிப்பிளவர், கீரை , முட்டை – ராதிகா ஆனந்தன்

150கி காளிப்பிளவர், 250 கி கீரைக் கலவை, 3முட்டையில் செய்யக்கூடிய அருமையான ஒரு நேர உணவு. பசலை, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, பாலக் மொத்தமாக ஒரு கைப்பிடியாக எடுத்துக் கொள்ளவும்.

கீரைக்கலவையுடன், 1 தக்காளி, 4 பூண்டு, அரை ஸ்பூன் சீரகம், 4 சின்ன வெங்காயம், 2 மிளகாய் வற்றல் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து 1 விசில் வைத்து உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

காளிப்பிளவரை உப்பு கலந்த சுடு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, காளிப்பிளவர் போட்டு நன்கு வதக்கவும், மல்லித்தூள் அரை ஸ்பூன், இப்பொழுது அரைத்த கீரை விழுது போட்டு வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி, மிளகு தூள் அரை ஸ்பூன் போட்டு வதக்கி பரிமாறுவதற்கு முன் இறுதியில் அரை
ஸ்பூன் வெண்ணெய், லெமன் ஜூஸ் சேர்த்து சாப்பிடவும்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media