முட்டை கற்சோறு – சரவணன் பெருமாள்

கோவையின் டிப்னீஸ் ஹோட்டலின் ஸ்பெஷல் முட்டை வறுவல். வெயிட்டர் கொடுத்த டிப்ஸ் வீட்டில் செய்துபார்த்தேன் சூப்பராக இருந்தது. அவர்கள் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவில்லை நானாக சேர்த்துக்கொண்டேன்.இனி செய்முறை. வேகவைத்த முட்டைகளை சிறுகத்தியில் சுற்றிலும் கீரினால் மஞ்சள் கரு தனியாக வந்துவிடும், மஞ்சள் கருவை வெட்ட வேண்டாம், வெள்ளை கருவை மட்டும் 8 டாக வகுந்துகொள்ளவும், வடச்சட்டியில் வேண்டும் அளவு எண்ணை ஊற்றி கறிவேப்பிலை தாளித்து, தேவையான அளவு சின்ன வெங்காயம் வதக்கி ஒரு பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான அளவு சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி கடைசியாக வகுந்த முட்டைகளை சேர்த்து அலுங்காமல் கிளரி இறக்கினால் சூப்பரான சுவையான முட்டை வறுவல் தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media