முட்டை கொத்துக்கறி குழிபணியாரம் – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தேவையான பொருட்கள்

முட்டை – 4
கொத்துக்கறி – 150 கிராம்
வெங்காயம் – 1/4 கப்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் பொடி – 1 தே.க.
கரம் மசாலா – 1/2 தே.க.
நெய் – தேவைக்கேற்ப

செய்முறை
1. பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகாய்பொடி, வெங்காயம் கலந்து தனியே வைக்கவும்.
2. கொத்துக்கறியை கரம் மசாலா, உப்பு , 1/2 கப் நீர் விட்டு குக்கரில் 2 விசில் வைக்கவும்.
3. வெந்த கறியை முட்டையுடன் கலந்து, குழிபணியாரக் கல்லில் நெய் ஊற்றி சுடவும்.

 சமையல் குறிப்பு: 

Follow us on Social Media