3 அடுக்கு ஆம்லெட் & வல்லாரை துவையல் – யசோ குணா

தேவையான பொருட்கள்

4 முட்டைகள்

மிளகு தூள் & சீரக தூள் & உப்பு தேவைக்கு

பேலியோ காய் கறிகள் வெங்காயம் தேவைக்கு

வெண்ணெய்

14657411_896823857119631_5449395657494934951_n

செய்முறை

முட்டையை நன்றாக கலக்கி எடுத்து வைக்கவும்

தோசைகல்லில் வெண்ணெய் சேர்த்து முதல் லேயராக கொஞ்சம் முட்டையை சீரகதூள் மற்றும் உப்பு 10 கிராம் அளவு வெங்காயம் தூவி விடவும் , 2 நிமிடம் மூடி வைக்கவும்.

இப்போது அடுத்தலேயர் முட்டையை ஊற்றி இங்கு அனுமதிக்கபடும் ஏதேனும் ஒரு காய்கறி துருவல் அ பொரியல் போன்றவற்றை தூவிவிடவும் , 2 நிமிடம் மூடி வைக்கவும்.

14650040_896823953786288_5731379774688843611_n

மூன்றாவது லேயர் மீதமுள்ள முட்டை கலவையில் ஒரு கரண்டி வல்லாரை துவையலை சேர்த்து கலக்கி ஊற்றி மூடிவிடவும்..

2 நிமிடங்கள் கழித்து திருப்பி போட்டு எடுத்தால் அடுக்கு ஆம்லெட் ரெடி ,

வல்லாரை துவையல் :

வாணலியில் தே . எண்ணெய் விட்டு சீரகம் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் புகைபடத்தில் இருக்கும் இஞ்சி பூண்டு , வல்லாரை , கறிவேப்பிலை , புளி சிறிதளவு , மிளகாய் , உப்பு ஆகிய பொருட்களையும் சேர்த்து வதக்கி , அரைத்தால் வல்லாரை துவையல் ரெடி.

பேலியோ அல்லாத உணவுமுறைக்கும் இந்த துவையல் வெகு பொருத்தம் .. குழந்தைகளுக்கு உகந்தது..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media