5 மினிட் பட்டர் சுரைக்காய் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

சுரைக்காய் : 1
பட்டர் : 3 தேக்கரண்டி
மிளகு தூள் : 1 தேக்கரண்டி
சீரகத்தூள் : 1 தேக்கரண்டி
உப்பு : தேவைக்கு

செய்முறை :

சுரைக்காயை தோல் சீவி வட்ட வட்டமாக வெட்டி , நடு விதை எடுத்து விட்டு வைக்கவும்.

ஒரு கடாயில் சிறிது தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து, பின் சுரைக்காய் சேர்த்து வேக விட வேண்டும். வெந்தவுடன் பட்டர் , மிளகு தூள் & சீரகத்தூள் சேர்த்து , பட்டர் உருகியவுடன் பிரட்டி இறக்கவும்.

5 மினிட் பட்டர் சுரைக்காய் தயார் !

ஒரு முட்டை ஆப்பாயில் போட்டு சேர்த்து சாப்பிட்டால் சுவை அல்லும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media