பேலியோ டயட்டில் முடி கொட்டுதல் / தலை வழுக்கை பிரச்சனைக்கு தீர்வு – செந்தழல் ரவி

பேலியோ டயட்டில் முடி கொட்டுதல் / தலை வழுக்கை பிரச்சனைக்கு தீர்வு –  பயோடின். அதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தலைமுடி வளர்ச்சி வீழ்ச்சிக்கு ஆண்கள் பெண்கள் என வித்யாசமில்லை. பெண்கள் தங்கள் தலைமுடி பற்றி அதிக கவலைப்படுவதாலும், நீளம் அதிகம் இருப்பதாலும் அதிக முடி உதிர்தல் போன்ற தோற்றம் ஏற்படும். பெண்களை விட சில ஆண்கள் முடி கொட்டுவதற்கு மூக்கால் அழுவார்கள்.

நம் தலைமுடி ஒரு புரதம். தலைமுடி மூன்று வகையான பருவநிலைகளை சந்திக்கிறது. அவை முறையே anagen, catagen, and telogen என அழைக்கப்படுகிறது.

வளரும் பருவம் (6 ஆண்டுகள்), இறப்பு பருவம் (இரண்டு வாரங்கள்), உறங்கும் பருவம் (ஒன்று முதல் 4 மாதம்) என ஒரு தலைமுடியின் ஆயுள் அவ்வளவே. ரத்த நாளங்களில் இருந்து செல்லும் சிக்னல்கள் மூலம் இந்த முடியின் ஆயுள் முடிந்துவிட்டது, புதிய முடி உருவாகவேண்டும் என புரிந்துகொள்ளப்படுகிறது. ஆக 80 ஆண்டுகள் வாழும் ஒருவர் தலை முடி 12 அல்லது 13 முறை விழுந்து எழுகிறது.

புதிய செய்தியாக இருக்கிறதா ?

நம் பேலியோ டயட்டில் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் நல்ல புரதம், நல்ல கொழுப்பு உணவு அதிகம் எடுப்பதால் அதிக, உற்சாகமான புரதம் உடலெங்கும் பரவுகிறது. இதனால் உறங்கும் பருவத்தில் இருக்கும் தலைமுடி, நாம் சீக்கிரம் விழலாம் புது ஆள் வந்துட்டார் என்பதை உணர்ந்துகொள்கிறது. அதனால் தான் ஆரம்ப கட்ட தலை முடி இழப்பு. அதன் பின் நல்ல தலைமுடி வளர்ச்சி. ஏற்கனவே பல ஆண்டுகளாக புரதம் குறைவான உணவு வகைகளை உண்டு வீக் ஆக இருக்கும் தலைமுடியின் பிறப்பிடம் (papilla) மீண்டுவிடுமா என்றால் அது கொஞ்சம் கடினமே. ஆனால் கொட்டும் முடி நன்றாக வளர்ந்துவிடும் என்பது என் சொந்த அனுபவம்.

இனி பயோடின் பற்றி..

Otto Heinrich Warburg, Dean Burk, PhD என்ற இரு அறிவியலாளர்களால் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் கண்டறியப்பட்டது இந்த பயோடின். தண்ணீரில் கரையக்கூடிய ஒருவகையான பி வைட்டமின் தான் இந்த பயோடின். (Vitamin B7). மிக சிக்கலான அணு அமைப்புகளை கொண்டது இந்த பயோடின். நான் வெஜிட்டேரியன் என்றால் உங்கள் உணவிலேயே உள்ளது, நம் தினப்படி பயோடின் தேவையும் மிக குறைவு தான்.
2500 பேர் கொண்ட மனித சோதனையின் போது மூன்றில் இருவருக்கு தலைமுடி, நகம் எல்லாம் நன்றாக வளர்ந்ததால் முடி நன்றாக வளர பயோடினை பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். பல வகை ஷாம்புகளும் பயோடின் இருப்பதாக சொல்லி மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது.

4 – 8 வயது : 8 mcg
9 – 13 வயது : 12 mcg
14 – 18 வயது : 20 mcg
19 வயதுக்கு மேல் : 30 mcg

என்பது பயோடின் டோஸேஜ் என இணையத்தில் படித்தேன். காண்க http://umm.edu/h…/medical/altmed/supplement/vitamin-h-biotin
கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உங்கள் மருத்துவரிடம் இது பற்றி விசாரித்து அதன் பின் பயோடின் எடுக்கலாம்.
உயர்ந்த லட்சியங்களையும், சாதிக்கத்துடிக்கும் தூய உள்ளத்தையும் கொண்டவர்கள், தலைமுடி உதிர்வது எல்லாம் ஒரு பிரச்சனையா என தட்டி விட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் ரவி என்பார் நம் ரிஷி ஜி. பயோடின் சப்ளிமெண்ட் எடுக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக எடுங்கள்.

பயோடின் ஒரு சப்ளிமெண்ட் என்பதால் மருத்துவரின் அனுமதி சீட்டு இல்லாமல் வாங்கலாம். குறிப்பிட்ட பிராண்ட் பரிந்துரைக்க விரும்பவில்லை. அதனால் நீங்கள் மருந்து கடையில் 10 எம்.ஜிக்கு அதிகமாக, அயர்ன் சத்துடன் இருக்கும் பயோடின் சப்ளிமெண்ட்ட் வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தலைமுடி கொட்டுவது நின்று, முடி வளரவும் வாய்ப்பு ஏற்படும். (இத்துடன் சில களிம்பு மருந்துகள் இருக்கின்றன, மருத்துவரிடம் கேட்டால் சொல்வார், அவற்றை முடி கொட்டிய பகுதியில் பூசி வந்தால் இன்னும் சிறந்த ரிசல்ட் கிடைக்கும்). வாழ்த்துக்கள்.

 

 

Follow us on Social Media