பேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.

யார்மூலமாகவோ, எதையோ படித்து, யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம்.
உங்கள் வரவு நல்வரவாகுக.

===================================================

தயவு செய்து குழுவில் புதியவராகக் கேள்வி கேட்பதற்கு முன்பாக இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் முழுவதுமாக நேரம் எடுத்து ஒரு லேப்டாப்பிலோ, டெஸ்க்டாப்பிலோ படிக்கவும். அனைத்தையும் படித்துப் புரிந்தபின் கேள்விகள் கேட்கவும்.

===================================================

இந்தக் பேஸ்புக் க்ரூப்பிற்குள் வந்துவிட்டீர்களே தவிர, இங்கே என்ன பேசுகிறார்கள்? இது என்ன டயட்? பேலியோ என்றால் என்ன? அதை வேகவைத்து சாப்பிடவேண்டுமா? காலை தேன் கலந்து சுடுநீரில் கலந்து சாப்பிடவேண்டுமா? சப்பாத்தியின் உள்ளே வைத்து சாப்பிடவேண்டுமா என்றெல்லாம் புரியாமல் , சரி, இது ஏதோ வேலை வெட்டி இல்லாத க்ரூப் போல இருக்கிறது, ஒரு காலை வணக்கம் இல்லை, 8 தலை நாகம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் அதிசிய வீடியோக்கள் இல்லை, பெரிய கேக் படத்தைப் போட்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இல்லை, இந்தியா கிரிக்கெட்டில் வெற்றிபெற்றும் ஒரு பாரதமாதாகி ஜே என்ற போஸ்ட் கூட இல்லை என்று குழம்பி நீங்கள் தவிக்கிறது புரிகிறது.
நிற்க.
இது ஒரு டயட் க்ரூப். இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள். இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும், குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு டயட் அல்லது வாழ்வு முறை.
 
இந்த டயட்டைப் புரிந்துகொள்ள முதலில் ஒரு கிலோ சர்ப் வாங்கி இதுவரை எது நல்ல உணவு, எது தீய உணவு என்று உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தக் கறைகளை எல்லாம் நன்றாக ஊறவைத்து அலசி வெளியே போட்டுவிட்டு வெண்மையான மனதுடன் படியுங்கள். ஏனென்றால் நீங்கள் டயட் என்றாலே அவசியமாக இருக்கவேண்டிய எதுவுமே இந்த டயட்டில் இருக்காது. எனவே அனாவசியமான குழப்பங்கள், கேள்விகள் தவிர்க்க ஏதுவாக இருக்கும்.
இந்த டயட்டின் அதிர்ச்சிகள்:
இங்கே எதுவெல்லாம் உண்ணத் தடை.
அரிசி. (பொன்னி, கைக்குத்தல், பாஸ்மதி, சுகர் ப்ரீ டயா ப்ரீ அரிசி, பாரம்பரிய அரிசி, ஆர்கானிக் அரிசி)
கோதுமை. (குட்டை கோதுமை, நெட்டை கோதுமை, டயாப்ரீ கோதுமை, சப்பாத்தி, ப்ரெட்)
மைதா. (கேக்குகள், பரோட்டாக்கள்)
பேக்கரி பொருட்கள்.(பேக்கரிகளில் விற்கப்படும் அனைத்தும்)
பழங்கள் / ஜூஸ்.
அனைத்துவகை இனிப்புகள் (நெய்யில் செய்யப்பட்டதுமுதல், டால்டாவில் செய்யப்பட்டது வரை)
தேன், நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுகர் ப்ரீ மாத்திரைகள், ஹீலர் ஜாங்கிரிகள், கேக், அல்வா, இறைவனே கொண்டு வந்து கொடுக்கும் அமிர்தம்.
ஓட்ஸ், மேகி, ஹெர்பாலைப், லேகியங்கள், உடல் எடை குறைப்பு மாத்திரைகள், மருந்துகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இன்னபிற)
பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டு குக் உணவுகள் அனைத்தும்.
ரிபைன்ட் என்ற வார்த்தையுடன் விற்கப்படும் சன்ப்ளவர், தேங்காய், நல்ல, கடலை , கடுகு , கனோலா, ரைஸ்பார்ன், டால்டா, பாமாயில் எண்ணெய்கள்.
ஜங்க் புட் எனப்படும், குப்பை உணவுகள் அனைத்தும்.
அனைத்துவகை பீன்ஸ், கிழங்கு வகைக் காய்கறிகள், அனைத்துவகை கடலைகள், (வேர்க்கடலை முதற்கொண்டு),
அனைத்து வகை பருப்புகள், புளி.
அனைத்துவகை சோயா பொருட்கள்.
காபி, டீ, அனைத்துவகை கூல் டிரிங்க்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ், சிட்டுக்குருவி லேகியங்கள்.
போங்க சார், அப்புறம் என்னத்தான் சாப்பிடறது? இது என்ன டயட் க்ரூப்பா? இல்ல மோட்சத்துக்கு ஆளெடுக்கிறீங்களா? என்று நீங்கள் கதறிக் கடுப்பாகி மயக்கம் போட்டு விழப்போவதற்கு முன்பாக மேலேயும், கீழேயும் படியுங்கள்.
மேலே முதலில் என்ன சொன்னோம்?
 
||||||||| இது ஒரு டயட் க்ரூப். இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள். இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும், குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு டயட் அல்லது வாழ்வு முறை.
 
இந்த டயட்டைப் புரிந்துகொள்ள முதலில் ஒரு கிலோ சர்ப் வாங்கி இதுவரை எது நல்ல உணவு, எது தீய உணவு என்று உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தக் கறைகளை எல்லாம் நன்றாக ஊறவைத்து அலசி வெளியே போட்டுவிட்டு வெண்மையான மனதுடன் படியுங்கள். ஏனென்றால் நீங்கள் டயட் என்றாலே அவசியமாக இருக்கவேண்டிய எதுவுமே இந்த டயட்டில் இருக்காது. எனவே அனாவசியமான குழப்பங்கள், கேள்விகள் தவிர்க்க ஏதுவாக இருக்கும். ||||||||||||
ஓக்கே, இப்பொழுது ஏன் சர்ப் வாங்கி அலசி காயவைத்து திறந்த மனதுடன் இந்த டயட்டை அணுகுங்கள் என்று சொன்ன காரணம் புரிந்திருக்கும். அது புரிந்தால்தான், எடை குறைப்பு என்றாலே, வெந்நீரில் தேன் கலந்து சாப்பிடவேண்டும், கொள்ளு வேகவைத்து சாப்பிடவேண்டும், சிறுதானியங்களை ஊறவைத்து சாப்பிடவேண்டும், குறைவாகச் சாப்பிடவேண்டும், கை கால் வீசி நடந்து, களைத்துப் போய் 4 பட்டர் பிஸ்கெட்டும், டீயும் குடித்துவிட்டு, ஆழ ஒரு தம் அடித்துவிட்டு இருப்பதே ஆரோக்கிம், ஹெர்பாலைபை குடித்துவிட்டு 5 ப்ளேட் ப்ரியாணையை அசால்ட்டாகத் தின்றால் எடை குறைந்துவிடும், 50 கிலோ மீட்டர் ஓடினால், நடந்தால், சைக்கிள் ஓட்டினால், ட்ரெட்மில்லில் ஓடினால் எல்லாம் சரியாகிவிடும் என்று முட்டிவலியோடு நீங்கள் நம்புவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
சர்ப் போட்டு நீங்கள் சரியாக அலசாததால், சைடில் லேசாக (அப்ப அருகம்புல்லும், கற்றாழையும் போட்டு கம்மங்கூழ் குடிக்கச் சொல்றாங்களோ) என்று ஒரு கறை இருப்பதால், மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
||||||||| இது ஒரு டயட் க்ரூப். இங்கே 40000 க்கும் மேற்பட்ட மெம்பர்கள் இருக்கிறார்கள். இங்கே நாங்கள் பரிந்துரைப்பது அதிக கொழுப்புள்ள உணவுகளும், குறைந்த மாவுச்சத்துள்ள உணவுகளும் சாப்பிடும் ஒரு டயட் அல்லது வாழ்வு முறை.||||||
போதும்யா, போதும் அந்தக் கீரிப்புள்ளையையும், பாம்புபையும் அவுத்துவிட்டு சண்டை போடவைங்க என்று நீங்கள் நினைத்தால் ஓரளவு இந்த டயட் பற்றி அறிய நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். யெஸ், இதற்கு மேல் வரும் செய்திகளைப் படிக்காமல் போனால் உங்களுக்கு, டயபடிக், ஹார்ட் அட்டாக், உடல்பருமன் போன்ற பலவியாதிகள் வரும்.
ரைட், இனி இந்த டயட் பற்றி சில அதிர்ச்சிகரமான உண்மைகள்:
இங்கே பரிந்துரைக்கப்படும் உணவுகள் கீழ்வருமாறு:
கிழங்குகளில்லாத, பீன்ஸ் இல்லாத, பருப்புகள் இல்லாத காய்கறிகள்.
பாதாம், பிஸ்தா, மகடாமியா, வால்நட்ஸ்.
மஞ்சள் கருவுடன் முட்டைகள்.
கொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்.
அனைத்துவகை கடல் உணவுகள்.
நெய், வெண்ணெய், சீஸ், பனீர், முழுக்கொழுப்பு பால், தயிர், மோர்.
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.
அனைத்துவகை கீரைகள்.
யெஸ், கொழுப்பு, கொழுப்பு, மேலும் கொழுப்பு:
இதெல்லாம் சாப்பிட்டால் மாரடைப்பு வராதா?
டயபடிக் இருப்பவர்களுக்கு சுகர் ஏறாதா?
உயிருக்குப் பிரச்சனை இல்லையா?  
எல்லாம் போகட்டும்,
இவ்வளவு கொழுப்பு சாப்பிட்டால் எப்படி உடல் எடை குறையும்?
தமிழனின் பாரம்பரிய உணவுகளான அரிசி, கோதுமை, மேகி, பட்டர்பிஸ்கட், பிரியாணி, பரோட்டா எல்லாம் சாப்பிடக்கூடாது என்கிறீர்களே? நீங்கள் சொல்வது டயட்டா? என்ற கேள்விக்கெல்லாம் விடையை நாங்கள் ஒரு சிறிய குழந்தைக்கும் புரிவதுபோல விளக்கமாக எழுதி இருக்கிறோம். பொறுமையாக கீழே உள்ள லிங்க்குகளை வாசிக்கவும்.
பேலியோ டயட் என்றால் என்ன?

பேலியோ டயட் பற்றி தமிழில் படிக்க புத்தகம் இருக்கிறதா?

இருக்கிறது, அதை ஆன்லைனில் வாங்க:

www.buypaleobooks.com

கிழக்கு பதிப்பகம்:

http://www.nhm.in/shop/9789384149680.html

கூகுள் ப்ளே ஸ்டோரில் மின்புத்தகமாக வாங்க:

https://goo.gl/dicazW

நம்ம புக்ஸ்

http://nammabooks.com/paleo

PIN Post படிக்கவும் என்று அடிக்கடி கமென்ட்டில் சொல்கிறார்களே அது என்ன ? :

பேலியோ டயட்டில் திரும்பத் திரும்பக் கேட்கப்படும் கேள்விகள் என்ன?

Paleo Cheat Sheets:

paleo_table_vegpaleo_table

இந்த டயட் பற்றிய சிறிய அறிமுக வீடியோ பதிவு:https://www.youtube.com/watch?v=s9x7oqdsKdI 

Follow us on Social Media