பேலியோ குறிப்பு 1 – செந்தழல் ரவி

பேலியோ குறிப்பு: செந்தழல் ரவி

 • உணவுமுறை மாற்றம் செய்வதால் முடி கொட்டும். ஆனால் கொஞ்ச நாளில் முடி கொட்டுவது நின்று நன்றாக வளரும். அதனால் முடி கொட்டுவதை பற்றிய பயம் வேண்டாம். பயோடின் சப்ளிமெண்ட் எடுத்தால் முடி நன்றாக வளரும்.
 • டி-மைண்டர் என்ற மொபைல் அப் உபயோகப்படுத்தினால் எந்த நேரத்தில் உங்கள் ஏரியாவில் வெய்யிலில் நல்ல வைட்டமின் டி கிடைக்கும் என்பது தெரியும், அதனால் நிறைய வைட்டமின் டி அறுவடை செய்யலாம்.
 • சூரியக்குளியல் போடும்போது டீ-ஹைட்ரேஷன் ஆகாமல் இருக்க ஒரு பாட்டில் தண்ணீர் வைத்துக்கொண்டு அவ்வப்போது குடித்துக்கொள்ளவும்.
  சூரியக்குளியளின் போது தலையில் தொப்பி அல்லது மெல்லிய துண்டு அல்லது முக்காடு போட்டுக்கொள்ளவும்.
 • க்ரீன் டீ / ப்ளாக் டீ பாக்கெட் சுடு நீரில் போட்ட பிறகு இரண்டு நிமிடமாவது வைத்திருந்து அதன் பின் பாக்கெட்டை வெளியில் எடுத்து மேலும் இரண்டு நிமிடம் காத்திருந்து குடிக்கவும். சுவை நன்றாக இறங்கியிருக்கும்.
 • வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உப்பு போட்ட லெமன் ஜூஸ் குடித்து வயிற்றுக்கு ரெஸ்ட் விடவும்.
 • மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் திரிபலா சூரணம் சாப்பிடலாம். நம் உணவு முறையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டாய்லெட் போனால் போதுமானது. தினமும் போகும் அவசியமில்லை.
 • அசைவர்கள் வாரம் ஒரு முறை ஈரல் போன்ற உள்ளுறுப்பு மாமிசம், ரத்த பொரியல் ஆகியவற்றை உண்ணவும்.
 • கறிக்கடையில் சுத்து கொழுப்பு இருக்கிறதா பாய் என்று அன்போடு கேட்டால் இலவசமாகவே கொழுப்பு தருவார்கள்.
 • அதிகப்படியான பசி ஏற்பட்டால் அவக்காடோ / பட்டர் ப்ரூட் / வெண்ணைப்பழம் உண்ணலாம். பசியை / பசி எண்ணத்தை கட்டுப்படுத்தும்.
 • குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பதை பழக்கமாக வைத்துக்கொள்ளவும். ப்யூர் வெஜிட்டேரியன்களுக்கு அன்பும் கண்டிப்புமாய் இதை சொல்கிறேன்.
 • காய்ச்சல் / சுரம் வந்தால் மருத்துவரிடம் போகவும். (ஆங்கில மருத்துவர்). காய்ச்சலுக்கும் பேலியோ / மக்கள் உணவுக்கும் சம்பந்தம் இல்லை. வேறு காரணங்கள் இருக்கலாம். மருத்துவர் உங்களை பரிசோதிக்கவேண்டும்.
 • சைவர்கள் பாதாம் சாப்பிட்டால் அதற்கு முன்னும் பின்னும் இரண்டு மணி நேரம் எந்த உணவும் எடுக்க கூடாது.
 • இரவு உணவை மணி ஏழு – ஏழரைக்குள் முடித்துவிடுதல் மிக நன்று. அதன் பிறகு எதுவும் சாப்பிடவேண்டாம்.
 • டயபட்டீஸ் உள்ளவர்களுக்கு லோ-சுகர் ஆகும். அதனால் சாக்லேட் கையில் வைத்துக்கொள்ளவும்.
Follow us on Social Media